82881199_2993421264042618_403829575542374400_n

82881199_2993421264042618_403829575542374400_n

உங்கள் வயிறு கோளாறு ஆகும் அளவிற்கு மன அழுத்த சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது அனுபவித்திருக்கிறீர்களா? ஏனென்றால் உங்கள் மனநிலை உங்கள் செரிமான ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தத்தை நிர்வகிப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அது உங்கள் வயிறு மற்றும் குடல் நன்மைக்கும் கூட உதவும். நமது மூளை மற்றும் நமது செரிமான அமைப்பு 500 மில்லியனுக்கும் அதிகமான நியூரான்களின் நெட்வொர்க்குடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது. முழு சீரண பாதை செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வேகஸ் நரம்பு மண்டலம், குடல், இதயம் மற்றும் நுரையீரலை கூட கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் மன அழுத்த சூழ்நிலைகள், சீரண பாதையோடு, இருதய அமைப்பையும் பாதிக்கிறது.

நாம் ஒரு மன அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நம் உடல் அதனை எதிர்த்து போராடுகிறது. இது கார்டிசோல் எனப்படும் ஹார்மோனை சுரக்கிறது. இத்தகைய மன அழுத்த சூழ்நிலைகளில், நமது செரிமான அமைப்பு உணவுக்குழாயின் பிடிப்பு, அஜீரணம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும். நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு, அவர்களின் செரிமான அமைப்புக்கு ஏற்படும் சேதம் அதிகம். நாள்பட்ட மன அழுத்தம் வீக்கங்கள், தசைப்பிடிப்பு, குடல் பாக்டீரியாவின் ஏற்றத்தாழ்வு, ஐ.பி.எஸ், ஐ.பி.டி, பெப்டிக் அல்சர், எருக்களிப்பு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே முதலில் உங்கள் மன அழுத்தத்தை வென்று உங்கள் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை காப்பாற்றுங்கள்.

Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, the best bariatric surgeon in Chennai.

For More Information about weight loss surgery in Chennai, visit us at springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com
Call us at (91) 9952002927to book an appointment

Posted by drmaransocial on 2020-12-24 13:19:57

Tagged: , #Stress , #weightloss , #Digestion , #DrMaran , #SpringfieldWellnessCentre